×

கேரளாவில் விதிமுறைகளை மீறி கட்டப்பட்ட மரடு அடுக்குமாடி குடியிருப்புகள் 11ம் தேதி இடிப்பு

திருவனந்தபுரம்: கேரள மாநிலம் கொச்சியை அடுத்த மரடுவில் நான்கு அடுக்குமாடி குடியிருப்புகள் உள்நோக்கி இடிந்து விழும் தொழில்நுட்பம் மூலம் மிகவும் பாதுகாப்பாக இடிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கடல்தீர ஒழுங்குமுறை விதிகளை மீறி கட்டப்பட்டுள்ள நான்கு அடுக்குமாடி குடியிருப்புகளை இடிக்கும் பணி 11ம் தேதி தொடங்க உள்ளது. பெட்ரோலியம் எஸ்போஸிவ்  சேஃப்டி ஆர்கனைசேஷன் என்ற நிறுவனம் இதற்கான பணிகளை மேற்கொண்டு வருகிறது. நான்கு கட்டிடங்களில் ஆல்பா என்ற கட்டிடத்தில் 3 ஆயிரத்து 598 துளைகள் போடப்பட்டு அவற்றில் அமோனியம் நைட்ரேட் என்ற பொருள் நிரப்பப்பட்டுள்ளது. இதேபோல் நேற்று முன்தினம் ஹோலிசயத் என்ற கட்டிடத்தில் 2 ஆயிரத்து 290 துளைகள் இடப்பட்டு 395 கிலோ வெடிபொருட்கள் நிரப்பப்பட்டுள்ளன.

இந்த கட்டிடங்கள் அனைத்தும் உள்நோக்கி இடிந்து விழும் தொழில்நுட்பம் மூலம் இடிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் கட்டிடங்கள் இடிப்பை முன்னிட்டு பாதுகாப்பு முன்னோட்டம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதனிடையே மரடு குடியிருப்புகளிலிருந்து வெறும் 6 மீட்டர் தொலைவில் உள்ள தங்கள் கட்டிடத்திற்கு ஆபத்து ஏற்படும் என்று ஈரா என்ற மற்றொரு கட்டுமான நிறுவனம் மனு அளித்துள்ளது. இதனை தொடர்ந்து, தங்களுக்கு பாதிப்பு ஏற்படும் என்பதால் 125 கோடி ரூபாய்க்கான காப்பீடு வழங்க கோரிக்கை விடுத்துள்ளது.


Tags : Demolition ,Kerala ,Muthoot Apartments , Demolition of Kerala, Rule, Wooden Apartments, 11th
× RELATED ஜூன் 3ல் பாபா ராம்தேவ் ஆஜராக கேரள நீதிமன்றம் ஆணை